Published : 29 Oct 2015 10:36 AM
Last Updated : 29 Oct 2015 10:36 AM
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ள நிலையில், தாங்கள் சிறைபிடித்த இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசும் முன்வந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஹிஷினி கொலோன் கூறியதாவது: இலங்கை சிறையில் உள்ள 120 இந்திய மீனவர்களை விடு விப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அடுத்த சில நாட்களில் இவர்கள் விடுவிக்கப் படுவார்கள். இதுபோல, இந்திய சிறையில் உள்ள 36 இலங்கை மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடல் பகுதியில் எல்லை தாண்டும்போது கைதாகும் மீனவர்களை மனிதாபி மான அடிப்படையில் இரு நாடுகளும் பரஸ்பரம் விடுவிப்பது வழக்கமான ஒன்றுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார். மீனவர் எல்லை தாண்டும் பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT