Last Updated : 03 Oct, 2015 04:59 PM

 

Published : 03 Oct 2015 04:59 PM
Last Updated : 03 Oct 2015 04:59 PM

செல்போனால் பாழாய் போகும் உறவுகள் - ஆய்வு தகவல்

செல்போன் பயன்பாட்டால் தங்களது துணைகள் தங்களை தவிர்க்க நேர்வதாக இன்றைய உறவுத் தன்மைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்ற ஜோடிகள் கூறினர்.

சுமார் 46.3 சதவீதத்தினர் இதனை பல சமயங்களில் தாங்கள் உணர்ந்துள்ளதாக ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

செல்போன் பயன்பாட்டால் நேரும் பின்விளைவுகளை பாதிப்பின் இறுதிக் கட்டத்தில்தான்பெரும்பாலானோர் உணர்வதாக மனித நடத்தை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் 'ஜர்னல் கம்ப்யூட்டர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்' என்ற பத்திரிகை இதனை வெளியிட்டுள்ளது.

செல்போனால் உறவுகளில் இருக்கும் நபர்கள் தங்களது இணையிடமிருந்து விலகுவதோடு அல்லாமல் தங்களது நிம்மதியை இழந்து தனிமை நிலைக்குத் தள்ளப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

எதிராளியின் மீது செலுத்த வேண்டிய கவனத்தை செல்போன் மீது காட்டும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Phubbing என்பர். இதனை முன்வைத்தே இந்த ஆய்வுக்கூறு உள்ளது.

இதற்காக அமெரிக்காவில் 453 ஜோடிகளிடம் இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பெரும்பாலானோர், தங்களது இணை தன்னுடன் இருக்கும்போது பெரும்பாலான நேரங்களில் செல்போனில் கவனம் செலுத்தி ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். இதனால் நிம்மதி இழந்து, நம்பிக்கையின்றி பல புதிய பிரச்சினைகளுக்கு வித்திடப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில், அவர் தனது செல்போனை பார்வைக்கு எட்டும் இடத்திலேயே வைப்பார்", "அவள் என்னோடு இருந்தாலும் அவளது கண்கள் செல்போன் மீது மட்டுமே பெரும்பாலும் இருக்கும்.", "நான் பேசுவதில் எதேனும் அவருக்கு பிடிக்கவில்லை என்றால், அவர் தனது செல்போன் பக்கம் திரும்பி விடுவார்." என்று பலரும் ஆய்வின்போது தங்களது உணர்வுகளையும் சந்தித்த பிரச்சினைகளையும் பகிர்ந்துள்ளனர்.

ஆனால், ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் மெரிடிவித் டேவிட் கூறும்போது, "செல்போனால் உறவு பாதிக்கப்படும் என்பதை நான் ஆதரிக்க மாட்டேன். உறவில் பிரச்சினை இருப்பதனால், அவர்களது நாட்டம் செல்போன் மீது போகிறது என்றே நான் கூறுகிறேன். உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்கள் மற்ற விஷயங்களில் நாட்டம் செலுத்த முயல்வார்கள். ஆனால் ஸ்மார்ட் போன்கள் நமது உறவுகளை அழித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது . " என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x