Published : 06 Oct 2015 02:44 PM
Last Updated : 06 Oct 2015 02:44 PM
அமெரிக்காவில் 147 பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தபோது, அதன் பைலட் திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து, சக விமானியின் சாதுர்யமான பணியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
போனிக்ஸ் நகரிலிருந்து பாஸ்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 147 பயணிகள் மற்றும் விமானக் குழுவோடு சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானி திடீரென மரணமடைந்தார். உடனடியாக சக விமானி விமானத்தை இயக்கி விமானத்தை பாதுகாப்பாக தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். அத்துடன் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க கோரினார்.
இதையடுத்து, ஓனோன்டகா கவுன்ட்டியில் உள்ள உள்ளூர் விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு காத்திருந்த அதிகாரிகள் விமானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனால் 5 மணிநேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் பாஸ்டன் நகரை அடைந்தது.
விமானியின் திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT