Published : 22 Oct 2015 07:53 PM
Last Updated : 22 Oct 2015 07:53 PM
பாப் பாடகி மனைவிக்காக ரூ.227.5 கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்ட சிங்கப்பூர் பாதிரியார் கோங் ஹி குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் ‘சிட்டி ஹார்வெஸ்ட் சர்ச்’ என்ற பெயரில் கிறிஸ்தவ சபை செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பாதிரியார் கோங் ஹி. இவரது மனைவி ஹோ யா சன் பிரபல பாப் பாடகி ஆவார்.
பாப் இசை உலகில் தனது மனைவியின் வளர்ச்சிக்காக பக்தர்களின் நன்கொடைகளை பாதிரியார் கோங் ஹி முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் ரூ.227.5 கோடியை சுருட்டியுள்ளார். அவரது சபையைப் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சுமார் ரூ.156 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோங் ஹி மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி சி கி ஓன், பாதிரியார் கோங் ஹி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் பாதிரியார் கோங் ஹிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT