Last Updated : 12 Nov, 2020 02:21 PM

 

Published : 12 Nov 2020 02:21 PM
Last Updated : 12 Nov 2020 02:21 PM

முகக்கவசத்தை அகற்றுவதால் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை: துருக்கி அரசாங்கம் அதிரடி

சிகரெட் புகைப்பதற்காக முகக்கவசத்தை அகற்றுவதால் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்துள்ளது துருக்கி அரசாங்கம்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலான நாடுகள் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமிக்கியுள்ளது.

ஆனால், கரோனாவின் வீரியத்தை அசட்டை செய்யும் மக்கள் நாட்டு எல்லைகள் கடந்து எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும் நபராக இருந்தால் மாஸ்கை கட்டாயமாகக் கழற்றிவிட்டுதானே புகைக்க வேண்டும்.

அப்போது தொற்று பரவும் ஆபத்து இருக்கிறதல்லவா? அதனால், துருக்கி அரசாங்கம் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்துள்ளது.
முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் பொருட்டு இந்த உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "துருக்கி அரசாங்கம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம். குடியிருப்பு வளாகங்களைத் தவிர வேறு எந்த பொது இடத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஆனால், புகைப்பிடிப்பவர்கள் இதனை அத்துமீறுகின்றனர்.

புகைப்பதற்காக முகக்கவசத்தை கழற்றிவிடுகின்றனர். இல்லையேல் அதனை கீழே இறக்கிவிட்டுவிடுகின்றனர். இதனால் நோய்த்தொற்று பரவக்கூடும்.

எனவே இன்று (நவம்பர் 12) முதல் பொது இடங்களில், பொதுப் போக்குவரத்து வாகன நிறுத்தங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கா, துருக்கியில் கரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டு உச்சம் தொட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

துருக்கியில் இதுவரை 4 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 11,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x