Published : 04 Nov 2020 09:40 PM
Last Updated : 04 Nov 2020 09:40 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கான பாதை தெளிவாக உள்ளது என்று ஜோ பைடன் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜன நாயக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் குழு கூறும்போது, “ அதிபர் தேர்தலில் வெற்றிக்கான பாதை தெளிவாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். முடிவு முன்னரே எடுக்கப்பட்டதாக நாங்கள் நினைகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபராகஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
இதில் ஜனநாயக அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 220 தேர்தல் சபை வாக்குகளையும், அதிபர் ட்ரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர். முதலில் மிகவும்பின் தங்கியிருந்த ட்ரம்ப் மெல்ல மெல்ல ஜோ பைடனுக்கு நெருக்கமாக வந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவ தீர்மானிக்கும் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
லட்சக்கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படாததால் இதுவரை எந்த தரப்பும் வெற்றிக்கும் உரிமைக் கோரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT