Published : 04 Nov 2020 08:26 AM
Last Updated : 04 Nov 2020 08:26 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஜோ பைடன் 131 தேர்தல் சபை வாக்குகளைப்பெற்று முன்னிலை வகிக்கிறார். , டொனால்ட் டிரம்ப் 92 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று பின்னடைவு கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி ஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20, ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15 வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
நேற்று ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப், ஜோ பைடன் இருவரும் 12 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புளோரிடா மாகாண ட்ரம்புக்கு சாதகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புளோரிடாவில் அதிபர் ட்ரம்ப் 55 லட்சத்து 96 ஆயிரத்து 644 வாக்குகளுடன் 51.2 % வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பைடன் இங்கு 47.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜார்ஜியா, நார்த் கரோலினா, ஆகியவற்றிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஓஹையோவில் கடைசி நிலவரப்படி ஜோ பைடன் திடீரென முன்னிலை வகிக்கிற
ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியா,வில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், நியூஜெர்ஸி, மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட்டில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT