Published : 02 Nov 2020 02:47 PM
Last Updated : 02 Nov 2020 02:47 PM

ஏமனில் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் கஃபே

ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழ்நிலையில், பெரும் பொருளாதார இழப்பையும், கடும் பஞ்சத்தையும் அந்நாடு சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பெண்களால் பெண்களுக்கு நடத்தப்படும் கஃபே ஒன்று அங்கு பிரபலம் அடைந்து வருகிறது. ஏமனில் பெண்களுக்கான ஓய்வு நேரம் இல்லை என்பதை உணர்ந்து இந்த கஃபேவை உன் பெரஸ் என்ற பெண்மணி தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பெரஸ் கூறும்போது, “ஏமனில் பெண்கள் ஓய்வுக்காக, நிம்மதியாகக் கூடுவதற்கு இடமில்லை. இதனால் பெண்களுக்காக ஒரு கடையை உருவாக்க எண்ணினேன். அதில் பெண் ஊழியர்களையே வேலைக்கு அமர்த்தினேன். ஏமனின் பாரம்பரிய முறையே பின்பற்றப்படுகிறது. ஆனால், கஃபே என்ற வார்த்தையை இங்கு சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். எந்த ஒரு புதிய முயற்சிக்கும் ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும்” என்றார்.

இந்த நிலையில் ஏமனில் பெண்களால் நடத்தப்படும் இந்த கஃபேவுக்குச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x