Published : 07 Oct 2015 12:44 PM
Last Updated : 07 Oct 2015 12:44 PM
உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக பைபிள் குறைப்பை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கணிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ல் தோன்றிய "சூப்பர் மூன்" உதயத்தின்போது உலகம் அழியும் என்று முன்னதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்போது நடக்க தவறிய அதுபோலான நிகழ்வு இன்று (அக்டோபர் 7) ஏற்படும் என்று ஃபிலடெல்பியா பைபிள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
"பைபிள் குறிப்பின்படி, இந்தத் தேதியில் ஆண்டவர் பேசியுள்ளார். எனவே, இன்றோடு உலகம் முற்றிலுமாக அழியும்" என்று பிலடெல்ஃபியாவில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டமைப்பின் இணையப் பிரிவு தலைவர் கிறிஸ் மெக்கென் கூறினார். அதுவும் தீயினால் அழிவு நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக செப்டம்பர் 27-ல் 'சூப்பர் மூன் எக்லிப்ஸ்' என்ற ஓர் அரிய சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதனை உலகின் பல மூலைகளிலும் பார்க்க முடிந்தது.
பூமிக்கு மிக அருகில் வந்த சந்திரன், பூமியின் நிழலால் முற்றிலுமாக மூடியது. வழக்கத்துக்கு மாறாக இந்த கிரகணம் மிகத் தெளிவாக காணப்பட்டது.
சந்திரன் முற்றிலும் சிவப்பாக காட்சியளித்தது. இந்தத் தேதியில் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் பரவியதால் இது 'பிளட் மூன்' (ரத்த நிலா) என்று சிலர் வர்ணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT