Published : 30 Oct 2020 07:34 PM
Last Updated : 30 Oct 2020 07:34 PM
துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.
இதுகுறித்து துருக்கி மீட்புப் பணி அதிகாரிகள் கூறும்போது, “துருக்கியில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவானது.
ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை என்று துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
#BREAKING : In the turkish city of Izmir, an earthquake with a magnitude of 6.6 hit. At least 10 buildings collapsed.#izmir #Turkey pic.twitter.com/nMdEEie3d7
துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கம் மட்டுமல்லாது துருக்கியின் கடற்கரையை ஓட்டிய பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு இதுவரை 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
துருக்கியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT