Published : 21 Oct 2020 08:21 PM
Last Updated : 21 Oct 2020 08:21 PM
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளனர்.
காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளனர். உயர் ரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாட்டுக்கு அடுத்து அதிக அளவிலான பலி காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT