Last Updated : 14 Oct, 2015 11:01 AM

 

Published : 14 Oct 2015 11:01 AM
Last Updated : 14 Oct 2015 11:01 AM

ஆஸ்திரேலிய பாலைவனத்தில் எறும்புகளை தின்று 6 நாட்கள் உயிர் வாழ்ந்த வேட்டைக்காரர்

ஆஸ்திரேலியாவின் கிரேட் விக்டோரியா பாலைவனத்தில் தொலைந்துபோன வேட்டைக் காரர் 6 நாட்கள் எறும்புகளை தின்று உயிர்பிழைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த வேட்டைக் காரர் ரெக் பாக்கர்டே (62). இவரும் இவரது சகோதரரும் தொலைந்துபோன தங்கள் ஓட்டகத்தை தேடி கிரேட் விக்டோரியா பாலைவனத்தில் காரில் அலைந்தனர்.

அப்போது ரெக் பாக்கர்டே காரில் இருந்து இறங்கி கார் செல்ல முடியாத பாலைவனப் பகுதியில் தனியாக நடந்து சென்றார். இதில் அவர் பாதை மாறி பாலைவனத்தில் தொலைந்துபோனார்.

உள்ளூர் போலீஸாரும் உறவி னர்களும் அவரை தேடி அலைந்தனர். 6 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் கண்டு பிடிக்கப்பட்டார். பாலைவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவர் அங்கிருந்த கறுப்பு எறும்புகளை பிடித்து தின்றுள்ளார். 6 நாட்களும் அவர் எறும்புகளை தின்றே உயிர் பிழைத்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x