Published : 22 Sep 2015 10:23 AM
Last Updated : 22 Sep 2015 10:23 AM
கிரீஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சிரிஸா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கம்யூனிஸ கொள்கைகளை உடைய அலெக்சிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகிறார்.
இது கிரீஸ் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று சிப்ராஸ் கூறியுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் 6 ஆண்டுகளில் 5 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 9 மாதங்களுக்குள் 2-வது முறையாக நடைபெற்ற தேர்தலில் சிப்ராஸ் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
கம்யூனிஸ ஆதரவு
ஐரோப்பிய நாடு ஒன்றில் கம்யூனிஸ கொள்கையு டைய தலைவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துள்ளது மேற்கத் திய நாடுகள் பலவற்றுக்கு அதிர்ச்சி யையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டு விட்ட நிலையில் சிப்ராஸின் சிரிஸா கட்சிக்கு 35 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைத்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சி 28 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. எனினும் கிரேக்க தேசிய சுதந்திர கட்சியுடன் இணைந்து சிப்ராஸ் மீண்டும் பிரதமராவது உறுதியாகிவிட்டது.
பெரும்பான்மை இழந்தது
ஐரோப்பாவில் தொன்மைமிக்க பெருமையுள்ள நாடான கிரீஸில் சமீப ஆண்டுகளில் கடும் பொருளா தார நெருக்கடியில் மூழ்கியது. அதை சீரமைக்க அப்போது பிரத மராக இருந்த அலெக்சிஸ் சிப்ராஸ் நடவடிக்கை மேற்கொண்டார். ஐரோப்பிய யூனியன், சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை கடும் நிபந்தனைகளுடன் கிரீஸுக்கு உதவ முன்வந்தன. எனவே சிக்கன நடவடிக்கை கட்டாயமானது. இந்நிலையில் உள்கட்சி குழப்பம் காரணமாக சிப்ராஸின் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பெரும்பான்மையை இழந்தது.
மீண்டும் தேர்தல்
அதையடுத்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிஸா கட்சிக்கும், வான் ஜெலிஸ் மெய்ராகிசின் புதிய ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 60 சதவீத வாக்குகள் பதிவாயின. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிப்ராஸின் சிரிஸா கட்சி எதிர்பார்த்த அளவை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. சிரிஸா கட்சிக்கு 35 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் கிடைத்தன. புதிய ஜனநாயக கட்சி 28 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. கோல்டன் டாவ்ன் கட்சி 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
கிரீஸ் மக்களின் வெற்றி
தேர்தலில் சிரிஸா கட்சி வெற்றி பெற்ற செய்தி வெளியானதும் அக்கட்சி தொண்டர்கள் தலைநகர் ஏதென்ஸ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெற்றி கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர். ஏதென்ஸில் கட்சியினர் வாழ்த்துகளை அலெக் சிஸ் சிப்ராஸ் பெற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய சிப்ராஸ், எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவ ருக்கும் நன்றி. இத்தேர்தல் வெற்றி ஒட்டுமொத்த கிரீஸ் மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாட்டின் பொருளா தாரத்தை சீரமைக்க தொடர்ந்து போராட இருக்கிறேன். 7 மாதங்க ளுக்கு முன்பு நாம் தொடங்கிய பொருளாதார சீரமைப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT