Published : 08 Oct 2020 10:00 AM
Last Updated : 08 Oct 2020 10:00 AM

கரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ந்தேதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால் ட்ரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். முன்னதாக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்படுவதற்கு முன் டுவிட்டரில் “நான் மிகவும் நலமாக இருக்கிறேன். விரைவில் பிரசார பாதைக்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது உடல் நலம் பற்றி வீடியோ பதிவில் கூறியதாவது:

எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது.

கரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும்.

கரோனா எனக்கு கடவுள் செய்த மறைமுக ஆசீர்வாதம். எனக்குக் கிடைத்த சிகிச்சை உங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். இலவசம் என்று அறிவிப்பேன், என்றார்.

வெள்ளை மாளிகை அதிபர் ட்ரம்ப் காய்ச்சல் இல்லாமலும் நோய் அறிகுறி இல்லாமலும் இருந்து வருகிறார் என்று தெரிவித்தாலும் அவர் கரோனாவிலிருந்து முழுதும் விடுபட்டாரா என்பது பற்றி உண்மையான நிலவரம் தெரியவில்லை என்ற சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x