Published : 06 Oct 2020 09:28 AM
Last Updated : 06 Oct 2020 09:28 AM

கரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிஸ்சார்ஜ்:  வெள்ளை மாளிகை திரும்பினார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 3 இரவுகள் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதையடுத்து வெள்ளை மாளிகை திரும்பினார். அவர் முற்றிலும் தொற்றிலிருந்து விடுபட்டாரா என்பது பற்றிய விவரம் இல்லை.

காப்டரில் வந்து இறங்கிய ட்ரம்ப் முகக்கவசத்தை கழற்றி விட்டு வெள்ளை மாளிகை பால்கனியிலிருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால்,ட்ரம்ப்புக்குக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர் ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ராணுவ மருத்துவ மையத்துக்குச் சென்றபின் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் மு ‘தான் விரைவில் பிரச்சாரத்துக்குத் திரும்புவேன்’ என்று தன் ட்விட்டரில் தெரிவித்தார் ட்ரம்ப். தற்காலிகமாக அவரது ஆற்றலை அதிகரிக்கும் மருத்துவம், ஸ்டெராய்ட் மருந்தான டெக்ஸாமெதாசோன், ரெம்டெசிவைர், பிறகு ஆண்ட்டிபாடிக்கல் ஆகியவை ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் அடங்கும்.

மருத்துவமனியில் ட்ரம்புக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது வெளியே வந்து விடவேண்டும் என்பதே அவரது மன அவசமாக இருந்தது.

ஞாயிறன்று லிமோசைன் காரில் வலம் வந்தார் ட்ரம்ப். மரணம் விளைவிக்கும் வைரஸைச் சுமந்து கொண்டு அடுத்தவர்களை தொற்றிவிடுமென்ற அபாயம் தெரியாமல் அவர் காரில் வலம் வந்ததாக ட்ரம்ப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் கரோனா வைரஸ் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் என்று ட்ரம்ப் ட்விட்டர் பதிவுகளில் கூறிக்கொண்டே இருந்ததும் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

அமெரிக்காவில் 76 லட்சத்து 79 ஆயிரத்து 644 ஆக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x