Published : 02 Oct 2020 06:43 PM
Last Updated : 02 Oct 2020 06:43 PM
ரஷ்யாவில் கரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 186 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 11,94,643 பேர் ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து முதல் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. இதற்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிட்டு கடந்த மாதம் பதிவு செய்தது.
மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT