Published : 02 Oct 2020 02:54 PM
Last Updated : 02 Oct 2020 02:54 PM
அமெரிக்க அதிபர் விவாத நிகழ்ச்சியின்போது நான் ஜோ பிடனை போன்று மாஸ்க் அணிவதில்லை என்று ட்ரம்ப் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ட்ரம்ப் பேசியதாவது, “ நான் ஜோ பிடனை போன்று மாஸ்க் அணிவதில்லை. நீங்கள் ஜோ பிடனை பார்க்கும்போதெல்லாம் அவர் மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கிறார். அவர் உங்களிடமிருந்து 200 அடி தூரத்தில் நின்று பேசுகிறார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த விவாதம் நிகழ்வு முடிந்த 72 மணி நேரத்தில் ட்ரம்புக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
அமெரிக்காவில் தீவிரமாக கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
"I don’t wear a mask like him. Every time you see him, he’s got a mask. He could be speaking 200 feet away from you and he shows up with the biggest mask I’ve ever seen," Trump told Biden at the #2020Debates, which took place less than 72 hours ago https://t.co/C7XTENNHVR pic.twitter.com/V2iLELsihJ
— Bloomberg Opinion (@bopinion) October 2, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT