Published : 01 Oct 2020 08:54 AM
Last Updated : 01 Oct 2020 08:54 AM
இந்தியாவில் அடக்குமுறைகளை சந்திப்பதாலும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாலும் அம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் தனது செயல்களை நிறுத்திக் கொண்ட விவகாரம் அமெரிக்க அரசின் ‘உயர்மட்ட’ கவனத்தை ஈர்த்துள்ளதாக அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் வெளியான செய்தி:
அமெரிக்க நிர்வாகமும் அமெரிக்க காங்கிரஸும் இது தொடர்பாக ‘மிக மிக நெருக்கமாக’ அவதானித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
‘இந்தியாவில் அம்னெஸ்டி பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பின் நிலை குறித்து நாங்கள் மிக மிக நெருக்கமாக அவதானித்து வருகிறோம். நிர்வாகம் மட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் இது கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. அரசின் உயர்மட்ட கவனத்தை அம்னெஸ்டி இந்தியா விவாகரம் ஈர்த்துள்ளது.
சிவில் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் செயலூக்கத்தை அமெரிக்கா எப்போதும் ஆதரிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில். சிவில் சமூகத்தின் பலமும், அச்சமூகத்தின் திறந்த தன்மையும்தான் இந்தியாவின் பலம் என்று கருதுகிறோம். இதுதான் இந்திய -அமெரிக்க உறவுகளின் பலமும் கூட.
எனவேதான் சிவில் சமூகத்தின் பணிகளுக்கு இடையூறு அளிப்பது எங்கள் கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு இப்படி நடந்தாலும் அமெரிக்கா கவலையே கொள்ளும். இந்தச் சூழ்நிலைக்கு வினையாற்றுவதையும் தீர்வையும் உருவாக்க முயற்சி செய்வோம். பன்னாட்டு கொள்கைகள் மற்றும் சட்டத்தின் விதிப்படி என்ன தீர்வு உண்டோ அதை பரிசீலிப்போம்’ என்று அந்த அமெரிக்க அரசு அதிகாரி தெரிவித்தார்.
அம்னெஸ்டி அமைப்பின் செயல்கள் ’இந்தியச் சட்டத்துக்கு எதிராக உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT