Published : 27 Sep 2020 09:26 PM
Last Updated : 27 Sep 2020 09:26 PM
கரோனா வைரஸ் கொல்லவில்லை எனில், காலநிலை மாற்றம் நம்மைக் கொன்றுவிடும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி சந்திக்கப் போகும் விளைவுகள் குறித்து நாளும் புதிய செய்திகள் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இமயமலையில் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும் என்றும், எதிர்காலத்தில் அந்தமான் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த இணையவழிக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் பிஜி நாட்டின் பிரதமர் பிராங் கூறும்போது, “சுற்றுச்சூழல்களால் ஏற்படும் பாதிப்பை நாங்கள் ஏற்கெனவே பார்த்து வருகிறோம். காட்டுத் தீ, பனிப்பாறைகள் உருகுதல் போன்ற அழிவுகள் நடந்து வருகின்றன. கரோனாவால் நாம் அழியவில்லை என்றால், காலநிலை மாற்றம் நம்மைக் கொன்றுவிடும்” என்றார்.
அமேசான் காடுகள் எரிப்பு மற்றும் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT