Last Updated : 07 Sep, 2015 06:54 PM

 

Published : 07 Sep 2015 06:54 PM
Last Updated : 07 Sep 2015 06:54 PM

இரண்டாவது குழந்தையா? கணவனின் வேலையா? முடிவெடுக்கும் கட்டாயத்தில் சீன பெண்கள்

சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 41 வயதான பெண் ஒருவர் தனது 8 மாத கருவை சட்ட விரோதமாக கலைக்க முடிவெடுத்திருப்பது சீனாவில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

போலீஸ் வேலை பார்த்து வரும் இப்பெண்மணியின் கணவர், அந்த 2-வது குழந்தை பிறந்தால் தனது வேலையை இழந்து விடுவார்.

இதனையடுத்து இந்தப் பெண் விவகாரத்தில் அவ்வளவு கடுமை காட்ட வேண்டாம் என்று யுன்னான் மாகாண அதிகாரிகளுக்கு அந்த மாகாணத்தைச் சேர்ந்த பலரும் தொலைபேசி மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆன்லைன் டிராவல் சர்வீஸ் ஒன்று இந்தப் பெண்ணின் கணவருக்கு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குழந்தைப் பெற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அரசு வேலையை ஒரு கருவியாக்கலாமா என்ற விவாதங்கள் சீனாவில் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x