Published : 17 Sep 2015 12:30 PM
Last Updated : 17 Sep 2015 12:30 PM
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கான நன்கொடை பிரச்சாரத்தை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் நன்கொடை வழங்கு வதற்கு வசதியாக Google.com/refugeerelief என்ற இணை யதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்கட்டமாக கூகுள் ரூ.36.5 கோடி நிதி செலுத்தி உள்ளது. மேலும் இந்தத் தொகைக்கு இணையாக ரூ.36.5 கோடி நன்கொடை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு உதவி செய்து வரும் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ், சர்வதேச மீட்புக் குழு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு ஆகிய லாப நோக்கமற்ற 4 நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக் கணக்கானோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.
இதுபோல போர் காரணமாக ஆப்கானிஸ்தான், யேமன், இராக் மற்றும் லிபியா நாட்டைச் சேர்ந்த வர்களும் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT