Published : 16 Sep 2015 02:42 PM
Last Updated : 16 Sep 2015 02:42 PM
ஜப்பானில் ராணுவத்தின் அதிகாரத்தை மாற்றி அமைக்கும் சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய போர் விமானங்கள் அங்கு பறந்ததை அடுத்து நாடாளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜப்பான் ராணுவ அதிகாரத்தை மாற்றி அமைக்கும் திருத்த மசோதாவை பிரதமர் அபே முன்வைத்துள்ளார். தற்போதைய நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்புக்காகவும் அவசரகால தேவைகளுக்கு பொதுமக்களுக்கு உதவும் வகையில் ராணுவம் செயல்படுகிறது.
திருத்த மசோதாவின்படி, ஆராய்ச்சி, பன்னாட்டு அவசர உதவிகள், அமைதி காக்கும் பணி, தீவிரவாத எதிர்ப்பு போன்ற பணிகளுக்கு ராணுவத்தை நாட்டுக்கு வெளியே பயன்படுத்த வகை செய்யப்படுகிறது.
வரும் வாரம் தாக்கல் ஆகும் இந்த மசோதாவுக்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல வாரங்களாக தலைநகர் டோக்கியோவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சட்டத் திருத்ததுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 4 ரஷ்ய போர் விமானங்கள் டோக்கியோவில் பறந்ததை அடுத்து இந்த போராட்டம் மேலும் வலு பெற்றுள்ளது. ஏராளமான இளைஞர்கள் ஜப்பான் நாடாளுமன்றம் மற்றும் ரஷ்ய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் தங்களது போர் அச்சத்தை வெளிப்படுத்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விமானம் பறந்ததாக கூறப்படுவது குறித்து ரஷ்யா இதுவரை பதில் கூறாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT