Last Updated : 24 Sep, 2015 10:47 AM

 

Published : 24 Sep 2015 10:47 AM
Last Updated : 24 Sep 2015 10:47 AM

ஹஜ் யாத்திரையில் முக்கிய நிகழ்வு: அராபாத் சமவெளியில் 20 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்

ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வாக, இறைத்தூதர் நபிகள் நாயகம் இறுதி பிரசங்கம் செய்த இடமாக நம்பப்படும் சவுதியின் அராபாத் பகுதியில் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் நேற்று குவிந்தனர்.

ஹஜ் பயணம் என்பது மெக்கா மாநகரத்தில் மூன்று புனித தலங்கள் சென்ற பின் பூர்த்தி அடைகிறது. இவை மெக்கா, மினா மற்றும் அராபாத் ஆகும்.

மெக்காவில் இருந்து நேற்று முன்தினம் மினா நகரை அடைந்த ஹஜ் யாத்ரீகர்கள் அங்குள்ள கூடாரங்களில் தங்கி இரவு முழுவதும் திருக்குர் ஆன் ஓதியபடியும் தொழுகை நடத்தியபடியும் இருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் நேற்று அராபாத் நோக்கி புறப்பட்டனர். வாகனங்கள், ரயில்கள் மூலமா கவும் நடைப்பயணமாகவும் இவர்கள் அராபாத் சென்றடைந் தனர். வெள்ளை அங்கி அணிந்த சுமார் 20 லட்சம் முஸ்லிகள்அரா பாத்தில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலிலும் அவர்கள் தொழு கையில் ஈடுபட்டனர். இறை வனால் தாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.

இங்குதான் 14 நூற்றாண்டு களுக்கு முன் இறைத் தூதர் நபிகள் நாயகம் தனது இறுதி பிரசங்கம் செய்ததாக நம்பப்படுகிறது.

சூரியன் மறைந்த பின் யாத்ரீகர்கள் அருகில் உள்ள முஜ்டலிபா என்ற இடத்தை நோக்கி புறப்பட்டனர். இங்கு கற்களை திரட்டிக்கொண்டு இரவு திறந்தவெளியில் தங்கினர். இவர்கள் இன்று மினாவில் உள்ள தங்கள் கூடாரங்களுக்கு திரும்புகின்றனர்.இதைத் தொடர்ந்து 3 நாட்கள் மினாவில் உள்ள 3 தூண்களில் ‘சாத்தான் கல்வீச்சு’ நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x