Published : 02 May 2014 10:13 AM
Last Updated : 02 May 2014 10:13 AM
இராக்கில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இதில் மீண்டும் வெற்றி பெறுவோம் என அந்நாட்டு பிரதமர் நூரி அல்-மாலிகி தெரிவித் துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு இராக்கி லிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு, அங்கு முதன்முறையாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தலின்போது நடைபெற்ற தீவிரவாத தாக்கு தலுக்கு 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 2 கோடி வாக்காளர்களில் சுமார் 60 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள போதிலும், முதல்கட்ட முடிவுகள் தெரிய 2 வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்தாதின் ரஷீத் ஹோட்டலில் முக்கியப் பிரமுகர்களுக் காக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் மாலிகி புதன்கிழமை வாக்களித் தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், "தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. ஆனால், எந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்" என்றார்.
அதேநேரம், மாலிகியின் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், "பொது மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தைரியமாக வாக்களித்த தன் மூலம் வன்முறையில் தங்க ளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தி உள்ளனர்" என்றார்.
இதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், "தீவிரவாதத் தைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இராக்கில் அமைதி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது டன் அந்நாட்டை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகளை பின் வாங்கச் செய்ய முடியாது" என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT