Published : 09 Sep 2020 11:04 AM
Last Updated : 09 Sep 2020 11:04 AM
அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமாக கருதப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வடக்கு கரோலினாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ அமெரிக்காவின் முதல்துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானமாக கருதப்படும். அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை.
அவர் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேறினார். அவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சுவாரசியமாக உள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் பேசி வருவது அவர்களுக்கு எதிராகவே போய் முடியும், கமலா ஹாரிஸ் ஒருக்காலும் அதிபராக முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னரே விமர்சித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT