Last Updated : 09 Sep, 2020 09:54 AM

 

Published : 09 Sep 2020 09:54 AM
Last Updated : 09 Sep 2020 09:54 AM

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு: மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

கரோனா வைரஸ் ஸ்வாப் சோதனை மையத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள். | படம்: எட்கர் சூ.

சிங்கப்பூரில் வர்த்தகங்கள், நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதால் இந்திய தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து நாடு திரும்பி வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி பி.குமரன் கூறும்போது, “தினசரி நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்து நாடு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 11,000 பேர் பதிவு செய்துள்ளனர்” என்றார்.

வந்தேபாரத் திட்டத்தின் படி சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை இழந்து தவிப்பதால் அவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப தேவைப்பட்டால் மேலும் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று தூதர் குமரன் தெரிவித்தார்.

இதில் வேலையிழந்தோர், மருத்துவச் சிகிச்சைக்காக நாடு திரும்புவோர், குடும்பச் சூழ்நிலை காரணமாகத் திரும்புவோர் ஆகியோர் உள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் 17,000 இந்தியர்கள் 120 சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பியுள்ளனர்.

தூதரக அதிகாரி குமரன் மேலும் கூறும்போது, “இந்தியா-சிங்கப்பூர் உறவுகளை மேம்படுத்த இந்தியா-ஆசியான் ஹேக்கத்தானை ஆண்டு இறுதியில் திட்டமிட்ட்டுள்ளோம். அதே போல் இந்திய ரூபே கார்டுகள் மூலம் சிங்கப்பூரில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல். நம் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், தொழிலகங்கள் இருநாடுகளுக்கிடையே நடைபெறும் விதமாக குளோபல் அடுக்கு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்புடன் உற்பத்தி கூட்டுறவு வாய்ப்புகளுக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். உலக உற்பத்தி ஸ்தலமாக இந்தியா விளங்க சிங்கப்பூர் முதலீடுகள் உதவும் மேலும் உற்பத்தித் துறையில் இந்திய தொழிலாளர்களின் திறன்வளர்ப்புக்கும் உதவும்.

சிங்கப்பூர் இந்திய சந்தையில் நீண்டகால அன்னிய முதலீட்டு ஆதாரமாக இருந்து வருகிறது, இந்நிலையில் சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் நம் நாட்டில் மேலும் தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார் குமரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x