Published : 09 Sep 2020 07:07 AM
Last Updated : 09 Sep 2020 07:07 AM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டில் இருந்து பணி புரிவதால் பல்வேறு பிரச்சினைகளை பலரும் எதிர்கொண்டுள்ளனர்.
தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக பணிகளை இணைந்து செய்வதால் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தொடக்கத்தில் வீட்டில் இருந்து பணி புரிவது சவுகர்யமாக கருதிய பலரும் தற்போது அதன் மூலம் உருவாகியுள்ள பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். தூக்கம் கெடுவது, நீண்ட நேரம் நீளும் அலுவலக கூட்டங்கள் ஆகியன பலரையும் பெரும் உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாரத்துக்கு 3 நாள் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. இரண்டு நாள் விடுமுறையுடன் கூடுதல் ஒரு நாள் விடுமுறை அளிப்பது ஊழியர்களின் மன உளைச்சலைக் குறைப்பதோடு அவர்கள் சிறப்பாக செயல்பட உதவும் என நிறுவனம் கருதுகிறது. புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இத்தகைய சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் அறிவித்துள்ள இந்த சலுகை பிற நிறுவனங்கள் மத்தியில் பெரும் புயலை உருவாக்கி உள்ளது. தங்களது நிறுவன ஊழியர்களும் இத்தகைய சலுகையை எதிர்பார்ப்பர் என்று நிறுவனங்கள் கருதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT