Published : 08 Sep 2020 09:26 AM
Last Updated : 08 Sep 2020 09:26 AM
கரோனா வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் பேசி வருவது அவர்களுக்கு எதிராகவே போய் முடியும், கமலா ஹாரிஸ் ஒருக்காலும் அதிபராக முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாடியுள்ளார்.
ஞாயிறன்று கமலா ஹாரிஸ் சிஎன்என் சேனலுக்கு கூறும்போது, வாக்சின் திறன் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கும் வரை அதிபர் ட்ரம்ப் சொல்வதை தான் நம்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார், இதுதான் ட்ரம்பின் ஆத்திரத்துக்குக் காரணம்.
“வாக்சின் பற்றி இழிவாகப் பேசிவிட்டார், இதன் மூலம் இந்தச் சாதனையை மக்கள் ஏற்காதவண்னம் அவர் பேசியுள்ளார். இது எனக்கான சாதனையல்ல, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயிலிருந்து மீட்பதற்கான சாதனை. சிகிச்சையிலும் நாம் சம அளவில் நன்றாகவே திகழ்கிறோம்.
நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பாகவே கரோனா வாக்சின் மக்களுக்கு கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றப்படுத்துகிறது.
எனவே மக்கள் நலனுக்கு எதிராக வாக்சின் குறித்து இழிவாகப் பேசியதற்கு பிடனும், ஹாரிஸும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஆஹா, ட்ரம்ப் சாதித்து விட்டார் என்று நினைத்து விடப்போகிறார்கள் எனவே வாக்சினை இழிவு படுத்துவோம் என்று அவர்கள் முடிவெடுத்து பேசி வருகின்ரனர். இது நாட்டுக்கு நல்லதல்ல, உலகிற்கே அவர்கள் பேச்சு நல்லதல்ல. ஆனால் அவர்கள் இப்படித்தான் பேசி வருகின்றனர்
கமலா ஹாரிஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதனால் தான் கூறுகிறேன் அவர் அதிபராக முடியாது.
அக்டோபரிலேயே வாக்சின் கிடைத்து விட முடியும். பொய்களைத் தாண்டி இந்த வாக்சின் பாதுகாப்பானது திறன் மிக்கது, விரைவில் அது வெளிவரும்” என்றார் அதிபர் ட்ரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT