Published : 07 Sep 2020 10:47 PM
Last Updated : 07 Sep 2020 10:47 PM
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கவுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பு கூறும்போது, “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,99,039 ஆக அதிகரித்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000 பேருக்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு உண்மையில் குறைந்துவிட்டதா? அல்லது மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தொற்று குறைவாகக் காணப்படுகின்றதா என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
முன்னதாக, பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது தொற்று குறைந்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT