Last Updated : 12 Sep, 2015 02:47 PM

 

Published : 12 Sep 2015 02:47 PM
Last Updated : 12 Sep 2015 02:47 PM

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 879 நாள் தங்கிய வீரர் பூமிக்கு திரும்பினார்

ரஷ்ய விண்வெளி வீரர் கென்னடி பதல்கா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 879 நாட்கள் தங்கி பத்திரமாக பூமிக்கு திரும்பினார். அவருடன் 2 சக வீரர்களும் பூமிக்கு வந்தடைந்தனர்.

கென்னடி பதல்கா, விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியவர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

கென்னடி, 5 வது முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு 879 நாட்கள் தங்கினார். இவருடன் கசகஸ்தானின் அய்டின் எயிம்பெடவ் மற்றும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆண்டிரிஸ் மோஜன்சன் ஆகியோரும் விண்வெளி நிலையத்தில் தங்கி விட்டு பூமிக்கு திரும்பி உள்ளனர்.

கசகஸ்தானில் வந்திறங்கிய இந்த 3 வீரர்களையும் அந்நாட்டு அதிபர் நர்சுல்தான் வரவேற்றார்.

கென்னடி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு கென்னடி இதற்கு முன் 4 முறை சென்றுள்ளார்.

தனது முதல் பயணத்தை 1998ம் ஆண்டு மேற்கொண்டார். 2வது முறையாக 2009ல் 199 நாட்கள் அங்கு தங்கினார். விண்வெளிக்கு 4 முறை பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் என்பது கென்னடியின் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x