Published : 04 Sep 2020 11:46 AM
Last Updated : 04 Sep 2020 11:46 AM
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை கூறும்போது, “ பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குப் பிறகு பிரான்ஸில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும்.
பிரான்ஸில் இதுவரை 3,00,181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,706 பேர் பலியாகினர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்குப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT