Published : 01 Sep 2020 04:41 PM
Last Updated : 01 Sep 2020 04:41 PM
இந்திய-சீன எல்லையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் பிரச்சினைகளை சீனா முதலில் ஆரம்பிக்காது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணமாகச் சென்றுள்ள வாங் யீ, “இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை இன்னமும் பிரிக்கப்படவில்லை என்பதால்ல் இது போன்ற பிரச்சினைகள் எப்போதும் ஏற்படுகிறது.
‘இந்திய-சீன எல்லையில் சீனா எப்போதும் ஸ்திரத்தன்மையையே சீனா பரமாரிக்க விரும்புகிறது. சூழ்நிலையை நாங்கள் முதலில் சிக்கலாக்குவதில்லை. ஆனாலும் எங்கள் பகுதியின் இறையாண்மையையும் பிராந்திய ஒர்மையையும் உறுதியாகப் பாதுகாப்போம்.
உரையாடல் எந்த பிரச்சினைகளையும் பேசவும் தீர்க்கவும் தயாராக இருக்கிறோம். இருதரப்பு உறவுகளில் விவகாரங்களை முறையான இடத்தில் வையுங்கள், பேசுவோம். வித்தியாசங்கள் எப்போதும் மோதலுக்கு வழிவகுக்கக் கூடாது. வித்தியாசங்களை அந்த மட்டத்திலேயே தீர்த்து விடுதலே நலம். பிரதமர் மோடியும் அதிபர் ஜின்பிங்கும் நிறைய சந்தித்திருக்கிறார்கள். பல கருத்தொற்றுமைகள் அவர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. இருதரப்பு ஒற்றுமை வித்தியாசங்களை சரிகட்டி விடும். பொதுநலன்கள் மோதல்களை தடுத்து விடும்” என்றார்.
இன்று இந்தியாவில் உள்ள சீன தூதரக அதிகாரி ஜி ரோங் என்பவர் கூறும்போது, “ஆகஸ்ட் 31ம் தேதி இந்திய படைகள் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற பல மட்டப் பேச்சுவார்த்தைகளின் உடன்படிக்கையை மீறியது. பேங்காங் சோ ஏரிப்பகுதியில் எல்.ஏ.சியின் ஊடே தெற்குக் கரையில் இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்தன, மேற்கு செக்டாரில் எல்லையில் ரெக்வின் கனவாய் வழியாக இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்தன. இதுதான் எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றங்களுக்குக் காரணம்.
இந்தியாவின் இந்தச் செயல் சீனாவின் இறையாண்மையை மீறியதாகும். இது தொடர்பான உடன்படிக்கைகளை மீறிய செயலாகும். இதுதான் எல்லையில் அமைதிச்சூழல் கெட்டுப் போவதற்குக் காரணம். இருதரப்பும் டென்ஷன்களை தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் இந்தச் செயலால் வீணாகிறது. எல்லைப்பகுதியில் சூழ்நிலையில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT