Published : 01 Sep 2020 11:22 AM
Last Updated : 01 Sep 2020 11:22 AM
கரோனா காலம் மிக மோசம்; விவசாயிகள்பாடு திண்டாட்டம், பட்டிணியை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பினால் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர், இதனால் நகர்ப்புறம், கிராமங்களில் கோடிக்கணக்கானோரின் உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா நிபுணர்கள் குழு ஆன் லைன் மாநாடு நடத்தினர். ஆசிய-பசிபிக் பகுதிகளில் பட்டிணிப்பெருக்கம் அதிகரிக்கும் சவாலை எதிர்கொள்ளவும் கரோனாவினால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததும் விவாதிக்கப்பட்டது.
போதிய ஊட்டச்சத்தின்றி கஷ்டப்படும் மக்கள் எண்ணிக்கை 13 கோடியே 20 லட்சமாக இந்த ஆண்டு அதிகரிக்கும் என்றும் 6.7 பில்லியன் குழந்தைகள் உலகம் முழுதும் ஊட்டச்சத்தின்மையினால் சிக்கலுக்கு ஆளாவர்கள் என்று கவலை தெரிவித்தனர்.
கியூ டாங்யூ என்ற நிபுணர் இது தொடர்பாக கூறும்போது, “நாம் 2 பெருந்தொற்றுகளை எதிர்கொள்கிறோம். இது ஆரோக்கியமின்மையினால் விளையும் சாவுகளுடன் வாழ்வாதாரங்களையும் நசுக்கி வருகிறது. இன்னொன்று பட்டினி, இதனை இந்த பத்தாண்டு முடிவில் முற்றிலும் அகற்றுவோம் என்று பன்னாட்டு சமூகங்கள் உறுதி எடுத்தன. ஆனால் முடியவில்லை”
கரோனாவினால் ஏற்பட்டு ஊறுபாடு, வர்த்தகம் மற்று பயணக் கட்டுப்பாடு, பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் நாசமாகின்றன, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல முடியவில்லை. போக்குவரத்துப் பிரச்சினை, கால்நடை வளர்ப்பு விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டு வறுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவிட் 19, இயற்கைப் பேரிடர்களான பெரும்ப்புயல், வெள்ளம், வறட்சி, நோய்கள், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிப் பிரச்சினைகள் ஆகியவை நம் உணவு உற்பத்தி, காத்தல், விநியோகம் உள்ளிட்ட அமைப்புகளை பன்முக இடர்பாட்டிலிருந்து காக்க வேண்டிய திறனை மேம்படுத்த வேண்டியுள்ளது.
பயிர்களை காக்க ஸ்மார்ட் போன் செயலிகள் ட்ரோன்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத்தை வேகமாக அமல்படுத்த வேண்டியுள்ளது, குறிப்பாக தாக்குதலுக்கு ஆளாகும் ஏழைநாடுகளின் சிறு விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை களைவதில் கவனமேற்கொள்வது அவசியம்.
ஏமன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பில்லாத நாடுகள் கவனம் பெற வேண்டும், இங்கு இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி இருந்து வருகின்றனர், சிகிச்சை இல்லாமல் இவர்கள் பலியாகும் ஆபத்து உள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்க்குதலினால் ஆப்பிரிக்காவில் சுமார் 50 லட்சம் மக்கள் பட்டினிக்கு தள்ளப்படுவார்கள்.
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் கூட உணவுக்காக நீண்ட வரிசையில் மக்கள் உணவு வங்கிக்கு முன்பாக காத்திருப்பதும், புதிதாக வேலையிழந்த கோடிக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்குவதும் சிக்கலாகியுள்ளது.
தாய்லாந்து போன்ற சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் நாடுகளில் எல்லைகள் மூடப்பட்டன, வர்த்தக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கின்றன.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்றுப் பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் புகேயில் நெல் விவசாயிகளுடன் மீன்பிடி கிராமங்கள் பண்டமாற்று முறையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தோனேசியாவில் ஏற்றுமதிக்கான மீன்களுக்குப் பதிலாக உள்ளூர் கிராம மக்களுக்காக விலை மலிவாகக் கொடுப்பதற்குரிய மீன்களுக்காக கடலில் வலை வீசுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT