Published : 24 Aug 2020 10:44 PM
Last Updated : 24 Aug 2020 10:44 PM
அமெரிக்காவில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,76,408 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “ அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 983 பேர்வரை பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா பலி 1,76,408 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 56,68,245 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகிரத்து வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அதிபர் ட்ரம்ப் அவசரகால அனுமதி அளித்துள்ளார்.
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் உள்ள ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை எடுத்து, நோயுற்றவர்கள் உடலில் செலுத்தி கரோனாவிலிருந்து குணப்படுத்தும் சிகிச்சையாகும். பல்வேறு நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்து செயல்படுத்தி வரும் நிலையில், சில நாடுகள் இதைச் செயல்படுத்தத் தயங்குகின்றன.
வேலையின்மை பிரச்சனை
கரோனா தொற்று நோய் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நாளும் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றனர்.
ஊரடங்கு முற்றிலுமாக நீக்கும்வரை இந்த வேலை இழப்புகள் தொடரும் என்ற சூழலே நிலவுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் வேலையின்மை காப்பீட்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT