Last Updated : 03 Sep, 2015 10:28 AM

 

Published : 03 Sep 2015 10:28 AM
Last Updated : 03 Sep 2015 10:28 AM

இராக்கில் முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை: துருக்கி நாட்டு தொழிலாளர்கள் 16 பேர் கடத்தல்

இராக்கில் ராணுவ சீருடையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சிலர் துருக்கி நாட்டுத் தொழிலாளர்கள் 16 பேரை கடத்திச் சென்றனர்.

இவர்கள் ஐஎஸ் தீவிரவாதி களாக இருக்கும் என்று சந்தேகிக் கப்படுகிறது. இராக் சதார் நகரில் நேற்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்தது. கடத்தப்பட்ட வர்களில் பொறியாளர்களும் அடங்குவர். சாதர் நகரில் விளை யாட்டு வளாகம் கட்டும்பணி துருக்கி நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதில் இந்த 16 பேரும் பணியாற்றி வந்தனர்.

அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் கட்டுமானம் நடக்கும் இடத் துக்குச் சென்று காவலர்களிடம் இருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டனர். பின்னர் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை தட்டி எழுப்பி வாகனத்தில் கடத் தினர். கடத்தல்காரர்கள் எவரும் வன்முறையில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. 16 துருக்கி தொழிலாளர்கள் கடத்தப்பட்டதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஆயினும் பாதுகாப்பு காரணங் களால் கடத்தப்பட்ட தொழிலா ளர்கள் பற்றிய விவரத்தையோ அல்லது எந்த நிறுவனத்தில் அவர்கள் வேலை செய்கின்றனர் என்ற விவரத்தையோ அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

இதனிடையே இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தர விட்டுள்ள அரசு கடத்தலுக்கு காரணமான நபர்களை கண்டறிய சிறப்பு குழு அமைத்துள்ளது.

அண்மையில் இராக்கில் ஐஎஸ் தீவிரவாத குழுவினருக்கு எதிராக துருக்கி விமானத் தாக்கு தலை மேற்கொண்டது. மேலும் அமெரிக்க போர் விமானங்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக தமது நாட்டில் அமைத்துள்ள சில முகாம்களை கொடுத்து உதவியது. இதனால் துருக்கியில் ஐஎஸ் தீவிரவாதிகள் சில தாக்குதல்களை நடத்தினர். எனவே இப்போது துருக்கி அரசை மிரட்டி பணியவைக்கும் வகையில் அந்நாட்டு தொழிலாளர்களை அவர்கள் கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகள் பொது வாக கடத்தி செல்வர்களை விடுவது இல்லை. அவர்களை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளி யிடுவதை வழக்கமாக கொண் டுள்ளனர். எனவே கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x