Published : 18 Aug 2020 10:36 AM
Last Updated : 18 Aug 2020 10:36 AM
அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழைய முயன்ற இந்தியரைக் கைது செய்தனர்.
அவர் பெயரை அமெரிக்க காவலர்கள் வெளியிட மறுத்தனர். இப்போது அவர் அமெரிக்காவிலிருந்து வெளியே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கனடாவின் ஆல்பெர்ட்டா மாகணத்தில் கவுட்ஸ் என்ற இடத்திலிருந்து அமெரிக்காவின் ஸ்வீட்கிராஸ் எல்லைக்குள் இந்தியர் ஒருவர் புகுந்ததை அமெரிக்க குடிமகன் ஒருவர் கண்டுப்பிடித்து அமெரிக்க எல்லை போலீசாரிடம் தெரிவிக்க, அவர்கள் நடவடைக்கை மேற்கொண்டனர்.
அவரைப் பிடித்து விசாரித்த போது தான் இந்தியக் குடிமகன் என்று கூறியதாகவும், தான் வெண்டுமென்றேதான் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாகவும் ஒப்புக் கொண்டதாகவும் அமெரிக்க எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
“அந்த இந்தியர் பல பைகளை தன்னுடன் கொண்டு வந்தார், அதில் சோதனை செய்த போது அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை, அவரை உரிய நடைமுறைகளுடன் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி விட்டோம்” என்றனர் எல்லை போலீசார்.
இது தொடர்பாக ஹாவ்ரே பிரிவு தலைமை உதவி ரோந்து அதிகாரி ஸ்காட் குட் கூறும்போது, “எங்கள் அதிகாரி எப்படி விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான உதாரணம் இது.
அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் எல்லைக் காவலர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள், ஆகவே சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் புக முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT