Last Updated : 15 Aug, 2020 08:38 AM

 

Published : 15 Aug 2020 08:38 AM
Last Updated : 15 Aug 2020 08:38 AM

கமலா ஹாரிஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலெல்லாம் இல்லை: அதிபர் ட்ரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் மீது தான் கடுமை காட்டவில்லை மேலும் அவரை ஒரு அச்சுறுத்தலாகவும் தான் பார்க்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் (77), 55 வயது இந்திய-ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்து வரலாறு படைத்தார்.

கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர், தாய் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இல்லை, நான் அவரிடம் கடுமை காட்டவில்லை. ஜோ பிடனை அவர் மற்றவர்களை விடவும் மோசமாக நடத்தினார் என்றுதான் கூறினேன்.

அந்த விவாதங்களை பார்த்தேன், அது மிகவும் சோர்வூட்டக்கூடியது, ஆனாலும் அவை விவாதங்களே. விவாதத்தின் சில நல்ல பகுதிகளையும் பார்த்தேன்.

கமலா ஹாரிஸ், ஜோ பிடனை மிக மோசமாக நடத்தினார். போகான்டாஸ் உட்பட ஜோ பிடனை கமலா ஹாரிஸ் போல் யாரும் மோசமாக நடத்தியதில்லை. ” என்றார் ட்ரம்ப்.

வெள்ளையர் அல்லாதவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உங்களுக்குப் பிரச்சினையா என்ற கேள்விக்கு, “இல்லவே இல்லை” என்று பதிலளித்தார்.

அதே போல் கமலா ஹாரிஸை தேர்தலில் ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறாரா என்று கேட்டதற்கு, “உங்களுக்கே தெரியும் அப்படியெல்லாம் இல்லை, அவர் ஒரு அச்சுறுத்தலெல்லாம் இல்லை” என்றார்.

அச்சுறுத்தல் இல்லை என்று கூறும் அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து கமலா ஹாரிஸைக் குறிவைத்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்ற விமர்சனத்தை நேற்று முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x