Published : 14 Aug 2020 08:08 PM
Last Updated : 14 Aug 2020 08:08 PM
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிக்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “ ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தொற்று நோயை அரசியலாக்குவதையும், அமெரிக்க மக்கள் மீது அவமரியாதையுடன் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
ஜோ பிடன் வைரஸைப் பற்றி தவறாகப் பேசியுள்ளார். விஞ்ஞான ஆதாரங்களை புறக்கணித்து, இடதுசாரி அரசியலை முன் வைக்கிறார். ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்” என்று தெரிவித்தார்.
கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலை தடுப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சரியாக செயல்படவில்லை என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்தும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
முன்னதாக ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT