Published : 13 Aug 2020 09:17 PM
Last Updated : 13 Aug 2020 09:17 PM
ஸ்பெயினில் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பெய்ததால் அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் ஊடகங்கள் தரப்பில் ," ஸ்பெயினில் செவில் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் பதிவானது. இதன் காரணமாக வீடுகள், கார்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. எஸ்டெபா நகரிலும் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ள பாதிப்பு இடங்களில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
The flood was reported in #Estepa #Sevilla after heavy rains continue #Spain pic.twitter.com/U60OI9ZxiA
— Global News (@GlbBreakNews) August 11, 2020
Oh my!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT