Published : 11 Aug 2020 07:55 AM
Last Updated : 11 Aug 2020 07:55 AM

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ட்ரம்ப், ‘வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு, இப்போது சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தது, ஒருவர் மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டார். சட்ட அமலாக்கத்துறையினர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுடப்பட்ட தனிநபர் ஆயுதங்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது, அவர்தான் சுடப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை பூட்டப்பட்டது. ரகசிய போலீஸார் ட்ரம்பை ஓவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார். உடன் உஷாரான பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்சில்வேனியா அவென்யூவின் 17வது தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. வெள்ளைமாளிகையிலிருந்து இது கொஞ்ச தூரத்தில்தான் உள்ளது.

ஆயுதத்துடன் வந்த நபரின் நோக்கம் என்ன என்பதை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்துக்குரிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது உடல்நிலை குறித்த உடனடி தகவல்கள் இல்லை.

இந்தச் சம்பவத்தை அடுத்து செய்தியாளர்கள் இந்தச் சம்பவத்தினால் நடுங்கி விட்டீர்களா என்று கேட்டனர், இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், “எனக்குத் தெரியவில்லை. என்னைப் பார்த்தால் பயந்தது போலவா தெரிகிறது?” என்று கேட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x