Published : 08 Aug 2020 06:30 PM
Last Updated : 08 Aug 2020 06:30 PM

கரோனா பரவல்; டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்

டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், “ அமெரிக்காவில் கரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கும்.

ஒரு வேளை அமெரிக்க மக்களில் 95% பேர் முகக்கவசம் அணிந்திருந்தால் இந்த எண்ணிக்கை 2,28,271 ஆக குறையும். சுமார் 66,000 மக்களின் உயிர் காக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x