Published : 08 Aug 2020 11:25 AM
Last Updated : 08 Aug 2020 11:25 AM
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7:38 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 17 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த விமான விபத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன். இறைவன் இந்தக் கடுமையான சூழலில் அந்தக் குடும்பத்தினருக்கு வலிமையை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
Saddened to learn of the Air India plane crash in Kerala state leading to loss of innocent lives. May Allah give strength to the bereaved families in their difficult hour.
— Imran Khan (@ImranKhanPTI) August 7, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT