Last Updated : 31 Jul, 2020 08:10 AM

 

Published : 31 Jul 2020 08:10 AM
Last Updated : 31 Jul 2020 08:10 AM

அமெரிக்காவில் முதல்முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்

நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் ஷெப்பெர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று நேற்று உயிரிழந்தது. கரோனாவில் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று அமெரி்க்காவில் உயிரிழப்பது இதுதான் முதல்முறையாகும்.

இதுவரை அமெரிக்காவில் 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, சிங்கம் ஆகியவற்றுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் எந்த மிருகங்களும் உயிரிழக்கவில்லை. ஆனால், முதல் முறையாக மிருகங்கள் கரோனாவில் உயிரிழப்பைச் சந்திப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அந்நாட்டில் கரோனாவில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், கரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என எந்த சான்றும் இல்லை.

இந்த சூழலில் கரோனாவில் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று நியூயார்க்கில் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து ஸ்டாடன் தீவைச் சேர்ந்த நாயின் உரிமையாளர்கள் ராபர்ட், அலிஸன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராபிக் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ நாங்கள் வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த 7 வயது நாய் கரோனாவில் உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நாய்க்கு சுவாசக் கோளாறு இருந்தது. அதன்பின் ராபர்ட் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டார்.

பிரதிநிதித்துவப்படம்

ஆனால், மே மாதம் கால்நடை மருத்துவர் வந்து எங்கள் நாயை பரிசோதித்தபோது நாய்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நாயின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. கடந்த 11-ம் தேதி ரத்தமாக வாந்தி எடுத்து, உயிரிழந்தது” எனத் தெரிவித்தார்

நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர் கூறுகையில் “ நாய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது உண்மைதான். ஆனால் கரோனா வைரஸால் உயிரிழந்ததா எனக் கூற இயலாது. நாயின் ரத்தப்பரிசோதனையில் இலிபோமா எனும் புற்றுநோய் இருப்பது தெரிகிறது.

இதுகுறித்து நியூயார்க் நகர சுகாதாரத்துறையினர் கூறுகையில் “ நாயின் உடலைப் பெற்று உடற்கூறு ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானோம். ஆனால்,அந்த தகவலை நாயின் உரிமையாளர்களிடம் கூறியபோது, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாயை எரித்துவிட்டதாகத் தெரிவித்தனர்” என்று தெரிவித்தனர்.

கடந்த ஜூன் மாதம் நியூயார்க் நகரில் ஜெர்மன் ஷெர்பர்டு நாய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை.

அமெரி்க்க அரசின் புள்ளிவிவரங்கள்படி,அந்நாட்டில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி, ஒரு சிங்கம் ஆகியவை கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், எந்த மிருகமும் இறக்கவில்லை,

முதல்முறையாக நாய் இறந்துள்ளது. அதேசமயம், மிருகங்கள், வீட்டுவளர்ப்பு பிராணிகள் மூலம் கரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்ற உறுதியான மருத்துவ ஆய்வுகள் ஏதும் இல்லை, அவ்வாறு ஏதும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், மனிதர்கள் மூலம் மிருகங்களுக்கு சில சூழல்களில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x