Published : 09 Sep 2015 11:12 AM
Last Updated : 09 Sep 2015 11:12 AM
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பயணிகளுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, "லாஸ் வேகாசில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் தீ பிடித்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் 159 பயணிகளும், 13 சிப்பந்திகளும் இருந்தனர். உடனடியாக விமானத்திலிருந்த அவசர வழிகள் திறந்துவிடப்பட்டன.
பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். 2 பயணிகளுக்கு மட்டும் லேசான தீக்காயம் ஏற்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT