Published : 25 Jul 2020 06:03 PM
Last Updated : 25 Jul 2020 06:03 PM
அமெரிக்காவில் சீன தூதரகத்தை மூட சொல்லி உத்தரவிட்டதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க தூதரகத்தை மூட சொல்லி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 3 நாட்களுக்கு மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீன உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் “ அமெரிக்காவின் நேர்மையற்ற நடவடிக்கைக்கு தேவையான பதிலடி இதுவாகும். சீனா - அமெரிக்க உறவில் தற்போதைய சூழல் சீனா பார்க்க விரும்பாதது. அமெரிக்காத்தான் இவை எல்லாவற்றுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளது.
வூஹானில் உள்ள தூதரகத்தை மூடவும் சீனா உத்தரவிட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சீன தூதரக அலுவலகத்தில் சீன விஞ்ஞானி டாங் ஷுவான் பதுங்கியுள்ளதாகவும் அவருக்கும் சீன ராணுவத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் அமெரிக்கா திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து விஞ்ஞானி தலைமறைவாக இருப்பதாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
இவர் அமெரிக்க தொழில், விஞ்ஞான ரகசியங்களை,கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி குறித்த ரகசியங்களை வேவு பார்க்கும் நபர் என்று ஒரு சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் ஹூஸ்டன் சீன தூதரக வளாகத்தை அமெரிக்கா மூடியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT