Published : 24 Jul 2020 08:54 AM
Last Updated : 24 Jul 2020 08:54 AM

அடக்க முடியாத கரோனா: அமெரிக்காவில் 3வது நாளாக 1,100 பேருக்கும் மேல் மரணம்

கரோனாவுக்கு அமெரிக்காவில் தொடர்ச்சியாக 3வது நாளாக 1,100 பேருக்கும் மேல் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்து 69,991 ஆக உள்ளது, பலியானோர் எண்ணிக்கை 1,47,333 ஆக உள்ளது. இன்னமும் 20 லட்சத்து 43 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மே மாதத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உணவு விடுதிகள், வர்த்தகங்கள் திறக்கப்பட்டன. கடற்கரைகளுக்கு மக்கள் வரத்து அதிகரித்தது.

ஜூலையில் 17 மாநிலங்களில் ஒரு நாள் மரண விகிதம் அதிகரித்து வருகிறது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் 174, புளோரிடாவில் 173, கலிபோர்னியாவில் 152, அரிசோனாவில் 89 என்று ஒரே நாளில் மரண விகிதம் அதிகரித்துள்ளது. டென்னிஸீயில் மட்டும் 37 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக 2வது வாரமாக அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 20 நாடுகளை எடுத்துக் கொண்டால் மொத்த பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா 6வது இடத்தில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் ஆய்வு தெரிவிக்கின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x