Published : 23 Jul 2020 05:17 PM
Last Updated : 23 Jul 2020 05:17 PM

ரஷ்யாவில் கரோனா பலி 13,000 -ஐ நெருங்குகிறது

ரஷ்யாவில் கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 13,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், ”ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12,892 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் நேற்று 5,848 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவில் கரோனாவால் 7,95,038 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மொத்தமாக 1. 5 கோடி பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 93 லட்சம் பேர் வரை மீண்டுள்ள நிலையில், 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.. கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41, 01,308 ஆகவும்,இறப்பு எண்ணிக்கை 1,46,192 ஆகவும் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரையில் 20 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

4-வது இடத்தில்ட் தற்போது ரஷ்யா உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x