Published : 17 Jul 2020 08:20 PM
Last Updated : 17 Jul 2020 08:20 PM

அமெரிக்காவுக்குப் போட்டியாக செயல்படுவது எங்கள் இலக்கு இல்லை: சீனா

சீன அதிபர் ஜி ஜின்பிங்

தொழில்நுட்ப கட்டமைப்பில் அமெரிக்கா வகித்துவரும் இடத்தை அடைவதோ, அமெரிக்காவுக்குப் போட்டியாக செயல்படுவதோ இலக்கு இல்லை., ஆனால் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா பரப்பும் அவதூறுகளை எதிர்த்து சீனா போரிடும் என்று சீன வெளியுறுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங் தெரிவித்துள்ளார்.

ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்றவற்றில் அதன் எல்லையை விஸ்தரிக்கும் வகையில் சீனா அதன் வெளிநாட்டுக் கொள்கையில் மூர்க்கமாக நடந்து வருவதாக சீனா மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அமெரிக்க தொழில் அதிபர்கள் சீனா உடனான வர்த்தக கொள்கை உருவாக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் சீனா அதன் தயாரிப்புகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடு விதித்ததைச் சுட்டிக்காட்டினார். சீனா அரசோடு தொடர்புடைய ஹேக்கர்கள், கரோனா தடுப்பு மருந்து தொடர்பான அமெரிக்காவின் ஆராய்ச்சிகளை திருடும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்தே தொழில் நுட்பக் கட்டமைப்பில் அமெரிக்காவின் இடத்தை பிடிப்பதோ அமெரிக்காவுக்குப் போட்டியாக செயல்படுவதோ சீனாவின் நோக்கமல்ல. அதேசமயம் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவும் பரப்பும் தீங்கிழைக்கு அவதூறுகளுக்கு எதிராக போரிடுவது சீனாவின் உரிமை என்று ஹூவா சுனிங் தெரிவித்தார்.

சீனா அதன் இறையாண்மை, தேச பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை பாதுகாக்க உரிமை உண்டு. சீன மக்கள் கடின உழைப்பால் உருவாக்கிய சாதனைகளை பாதுகாக்கவும் உரிமை உண்டு. சீன அரசுக்கு எதிராக அமெரிக்க பரப்பும் அவதூறுகளுக்கு எதிராகவும் போராடவும் சீனாவுக்கு உரிமை உண்டு என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x