Published : 17 Jul 2020 09:22 AM
Last Updated : 17 Jul 2020 09:22 AM
இந்திய, சீன மக்கள் அமைதிக்காக நாங்கள் சாத்தியமாகக் கூடிய அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் முந்தைய அதிகாரி ஜான் போல்டன் கூறிய போது, நெருக்கடி முற்றினால் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பாரா என்பதை உறுதியாகக் கூட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ட்ரம்ப் கூறியதாகக் கூறும்போது, ‘இந்திய, சீன மக்களை தான் மிகவும் நேசிப்பதாக அதிபர் தெரிவித்தார். இருநாட்டு மக்களின் அமைதிக்காக தங்கள் தரப்பிலிருந்தும் எந்த உதவியும் செய்வதாக தெரிவித்தார்’ என்றார்.
இதற்கு முன்னதாக வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லேரி கட்லோ, அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி இந்தியா, அதிபர் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பர் என்றார்.
அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, “இந்தியா ஒரு பெரிய கூட்டாளி. எங்களின் முக்கியமான கூட்டளி இந்தியா. இந்திய வெளியுறவு அமைச்சருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் அடிக்கடி பரந்துபட்ட பல விஷயங்கள் குறித்து பேசுவோம். சீனாவுடனான மோதல் பற்றியும் பேசுவோம். சீனாவின் தொலைத்தொடர்புக் கருவிகள், உள்கட்டமைப்புகளால் ஏற்படும் இடர்கள் குறித்தும் பேசுவோம்” என்றார்.
இந்திய அமெரிக்க பினான்ஸ் கமிட்டி இணைத்தலைவர் அல் மேசன் கூறும்போது, “முந்தைய அதிபர்கள், ஜனநாயக அதிபர்களாயினும், குடியரசு அதிபர்களாயினும் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் சீனியர், ஜூனியர் , ஒபாமா என்று யாரை எடுத்துக் கொண்டாலும் இந்தியாவுக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை என்று இந்திய அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள்.
காரணம் இதன் மூலம் சீனாவை புண்படுத்துவதாக அவர்கள் கருதினர்.
அதிபர் ட்ரம்புக்கு மட்டும்தான் ஐ லவ் இந்தியா என்று கூறிம் தைரியம் உள்ளது. இந்தியர்கள், இந்திய-அமெரிக்கர்கள் மீது ட்ரம்ப் சீரான முறையில் தன் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT