Published : 12 Jul 2020 01:42 PM
Last Updated : 12 Jul 2020 01:42 PM
சீனாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலையை எட்டியுள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. ஆறுகளில் அதீத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சில பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாயின.
தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிற நிலையில் ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சீனாவின் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சீனாவில் 140க்கும் அதிகமானவர்கள் இதுவரை மாயமாகி உள்ளனர்.
சீனா இத்தகைய கனமழையைப் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும் 1961-க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் இம்மாதிரியான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT